Kogilavani / 2015 மார்ச் 25 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு 24 மணித்தியாலமும் நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்துக்கு எதிராக பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கவனத்திற் கொண்டே இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் நிலப்பரப்பு, அலுவலகம் மற்றும் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவரும் அதிகாரிகளின் தங்குமிடங்கள் போன்றவற்றுக்கே இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
மேற்படி உமா ஓயா வேலைத்திட்டத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாகவே இந்த பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவி;க்கப்படுகின்றது.
இதேவேளை, உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட 600 வீடுகளை மீள நிர்மாணித்து அவர்களுக்கான நீர் வழங்கள் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
40 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago