2026 மே 15, வெள்ளிக்கிழமை

போட்டிகளை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி

Kogilavani   / 2015 மார்ச் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சாகித்திய விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 16 வருடங்களுக்கு பிறகு ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, பாடசாலை மட்ட திறந்தப்போட்டிகளுக்கு குறுகியகால அழைப்பில் வந்து, ஒத்துழைப்பை வழங்கி போட்டிகளை சிறப்பித்த அனைத்துப் பாடசாலைகளுக்கும் திறந்தப்போட்டிகளில் கலந்துக்கொண்ட கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 'கடந்த 21 முதல் 23ஆம் திகதிவரை பதுளையில் நடைப்பெற்ற போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்றுவதற்கு மத்திய, கிழக்கு மாகாணங்களிலிருந்து வருகை தந்து 3 நாட்களும் சிறப்பு பணியாற்றிய அனைத்து பெருமக்களின் பணியும் மெச்சதக்கது.

ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வரும் வேளையில் இப்போட்டி நிகழ்ச்சிகளின்  மூலம் சாகித்திய விழா இறுதி நாள் நிகழ்வுகள் தொடர்பான ஆர்வம் மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்பேசும் மக்களின் மட்டத்திலும் ஏற்பட்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.

சாகித்திய விழாவுக்காக அமைக்கப்பட்ட குழு அங்கத்தவர்கள் தமக்குரிய பொறுப்பை சரிவர நிறைவேற்றி வருவதன் காரணமாக விழாவுக்குரிய பணிகள் இலகுவாகியுள்ளன.

இச்சாகித்திய விழா மூலம் எமது சாகித்தியம் இருப்பை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கான களம் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டத்தில் மிளிர ஊவாத் தமிழ்சாகித்திய விழா துணைப்புரிந்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .