Kogilavani / 2015 மார்ச் 27 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, வட்டவளை, தியகல பகுதியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவசம முகாமையின் கீழ் இயங்கும் தமக்கு, தோட்ட நிர்வாகம் ஒரு மாதத்துக்கான முற்பணத்தை இன்றுவரை வழங்கவில்லை என்று கூறியே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு, ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இத்தோட்டத்தில், ஒவ்வொரு மாதமும் இவ்வாறான சம்பள பிரச்சினை ஏற்படும் எனவும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்மெனவும் தொழிலாளர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
சுமார் 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டமானது பொலிஸாரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதுடன் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.






3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago