2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

ரம்புக்கனை பொது சந்தை மற்றும் கடை தொகுதிகள் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

அரசாங்கத்தின் 780 இலட்சம் ரூபாய் நிதிச் செலவில் அமைக்கப்பட்ட ரம்புக்கனை பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் நேற்று வியாழக்கிழமை (26) திறந்து வைக்கப்பட்டன.

பொதுச் சந்தைக்கான கட்டடத்தொகுதி 400 இலட்சம் ரூபாய் செலவிலும் கடைத் தொகுதிகள் 380 இலட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளன. 

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் ஏ.டி.பிரேமதாஸ, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மாகாண சபை உறுப்பினர் சந்தித் சமரசிங்க மற்றும் ரம்புக்கனை பிரதேச சபைத் தலைவர் அதுல அதகம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .