2025 ஜூலை 16, புதன்கிழமை

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 13 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் நகரம் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹட்டன் எம்.ஆர் நகரப்பகுதி பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவா் படுங்காயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னா், மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனா்.

இவ்விபத்து இன்று (13) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாரதியும் பயணித்த மற்றுமொருவருமே காயமடைந்துள்ளனா்.

இவ்வாறு விபத்துக்குள்ளாகியவா்கள் நோர்வூட் பகுதியை சேர்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியை அதிக வேகமாக செலுத்தியதாலேயே இவ்விபத்து நோ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனா். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .