2025 ஜூலை 16, புதன்கிழமை

தொழிற்சாலையில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ராகலை - சூரியகந்தி பகுதியிலுள்ள லீடேஸ்டல் தேயிலை தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தொழிற்சாலையின் பெருமளவிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலையை உலர்த்துவதற்காக பயன்படுத்தப்படும் இடத்திலேயே தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

தொழிற்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத் தீவிபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .