2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அலுவிஹாரவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரஞ்சித் அலுவிஹாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை வெகு விரைவில் கொண்டுவரவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

தனிக் கட்சியொன்றின் பெரும்பான்மையை பெற்ற முதலமைச்சர்  என்ற வகையில் எவ்வித சவாலையும் எதிர்நோக்க தயார்.

கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மத்திய மாகாண சபை நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் அதன் எதிரக்;கட்சி தலைவர் உள்ளிட்ட சிலர் நடந்துக் கொள்வதால் சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் ரஞ்சித் அலுவிஹாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வெகு விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் ஆசியும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .