2026 மே 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் சகோதரிகள் படுகாயம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

திம்புளை- பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகர பிரதான பாதையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில், ஸ்டோனிகிளிப் தோட்டத்தை சேர்ந்த 16, 17 வயது மதிக்கத்தக்க சகோதரிகளே படுகாமயடைந்துள்ளனர்.

மேற்படி இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோது, தலவாக்கலை நோக்கிச் சென்ற லொறியில் மோதுண்டுள்ளதாக திம்புளை, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இடத்தில் ஏற்கனவே பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் வேக கட்டுபாட்டு தடையை அமைக்குமாறும் பிதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .