2025 ஜூலை 10, வியாழக்கிழமை

'ஒற்றுமையாக செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும்'

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள 20ஆவது  திருத்தச்சட்டத்தினூடாக சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மலையக மக்களாகிய நாம் ஒற்றுமையாக எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உருப்பினரும் இ.தொ.கா.வின் தலைவருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேதினம் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு இன்று என்ன கிடைத்தது? நாற்பது வருடம் போராடி பெற்ற எமது வாக்கு இன்று செல்லாகாசாக மாறும் நிலையே ஏற்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள 20ஆவது  திருத்தச்சட்டத்தினூடாக விகிதாசார தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாரியான தேர்தல் முறைமையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதனால் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மலையக மக்களாகிய நாம் ஒற்றுமையாக எமது உரிமைகளை வென்றெடுக்க வோண்டும். இ.தொ.கா. ஆரம்பித்த வேலை திட்டங்களை இன்று ஒரு சில அரசியல் வாதிகள் முன்னெடுத்து செல்கின்றார்கள்.

மலையக மக்கள் என்றும் இ.தோ.கா.வுடனையே என்பதை நிரூபிக்க இந்த மேதினகூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் பரைசாற்றுகிறது என்றார.;

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .