2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நுவரெலியா, கந்தபளை கொங்கோடியா தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரத்தின் ஆலோசனையின் கீழ் அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது

மேற்படி தோட்டத்திலுள்ள லயன்  குடியிருப்பு ஒன்றில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது தொடர்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த லயன் குடியிருப்பில் வசித்த வந்த குடும்பங்களுக்கு தலா 7 பேர்ஜஸ் காணியில் தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், பெருந்தோட்ட மனித வள அவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஸ்ரீதரன், ராஜாராம் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .