Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kanagaraj / 2015 மே 04 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ ஹெல்பொடகம பிரதேசத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
கண்டி பிரதேசத்திலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற டிப்பர் வாகனமும் கட்டுகித்துல பிரதேசத்திலிருந்து கொத்மல்கம பிரதேசத்துக்கு 05 பேருடன் சென்ற முக்கக்கரவண்டியும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் எஸ்.ஜி.சுதுஅக்குருகெதர சார்லிஸ், கொடகும்புரேகெதர ஆரியசிங்க ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
பலியான இருவரில் ஒருவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலை சவச்சாலையிலும் மற்றவரின் சடலம் புஸ்ஸல்லாவ வைத்தியசாலை சவச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூவரில் 02 பேர் கம்பளை வைத்தியிலும் ஒருவர் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிப்பர் வாகனம் ஒட்டுனர் புஸ்ஸல்லாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெயரத் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .