2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அடையாளம் காணப்படாத சடலம்

Sudharshini   / 2015 மே 05 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கொடக்கவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவின பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் கொடக்கவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 65-70 வயது மதிக்கத்தக்கவர் என்றும் சடலம் அடையாளம் காண்பதற்காக கொடக்கவெல பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை கொடக்கவெல பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .