2025 ஜூலை 09, புதன்கிழமை

ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுமி, சடலமாக மீட்பு

Kanagaraj   / 2015 மே 06 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தில் உள்ள ஓடையில் அடித்துசெல்லப்பட்ட சிறுமி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு வயதான ராஜா அபிசாந்தி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுமி தனது தாய், தந்தையுடனும் கடந்த 5ஆம் திகதி மாலை 5 மணியளவில் மாட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்றுள்ளார்.

புல் அறுத்துக்கொண்டு அம்மூவரும் வீட்டுக்கு திரும்பும் போது கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஓடையை கடக்க முற்பட்டபோது, ஓடையில் சிறுமி தவறி விழுந்துவிட்டார்.

கடும் மழைக்காரணமாக அந்த சிறுமியை பெற்றோரால் உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. இதுதொடர்பில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட பொலிஸாரும், பிரதேசவாசிகளும் அச்சிறுமி விழுந்த இடத்திலிருந்து சுமார் 15 அடி தூரத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .