Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kogilavani / 2015 மே 07 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
கல்வி அமைச்சு செயலாளரின் அசமந்தபோக்கு காரணமாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷணன் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்ததாவது,
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் அக்கரையின்மையோடு செயற்பட்டுள்ளதுடன் ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள், குறித்த திகதியில் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு பலமுறை அறிவித்த போதும் அவர் அசமந்தபோக்குடன் செயற்பட்டு வருகின்றார்.
இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை திருப்தியற்ற நிலையில் முடிவுற்றதால், மீண்டுமொரு பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோர் ஈடுப்படவுள்ளனர்.
பேச்சுவார்த்தையின்போது பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சின் செயலாளர் பல்வேறு விடயங்களில் அசமந்த போக்குடனும் பொறுப்பற்றும் செயற்பட்டு வருகின்றார். இவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் தன்னிச்சையுடன் செயற்பட்டு வருவதால், அது புதிய அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையிலுள்ள கல்வியற் கல்லூரிகளில் தமது கற்கைநெறிகளை நிறைவுசெய்து வெளியேறும் 3,000 பேருக்கு பத்தரமுல்லை,செத்சிரிபாயவில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவையும் கல்வி இராஜாங்க அமைச்சர் புறக்கணிக்கவுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
1 hours ago