2025 ஜூலை 09, புதன்கிழமை

முதலில் 2,000 பேருக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம்

Kogilavani   / 2015 மே 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் முதலில் 2,000 பேருக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்கள் நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று புதன்கிழமை மாலை (6) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடிதம் கிடைக்கப்பெற்ற அனைவரும் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போது 2,000 பேர் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள ஒரு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்படும் 1,000 பேருக்கான நியமனக் கடிதங்கள் மே 29ஆம் திகதி வழங்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .