Kogilavani / 2015 மே 10 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த, கூட்டு ஒப்பந்தம் தொடர்பான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை(18) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஒப்பந்தம் தொடர்பான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெற்றது. இதன்போது, சம்பள உயர்வு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் இப்பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
இந்நிலையில், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையின்போது அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பில் எனது தொழிற்சங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தொழிற்சங்க கூட்டு ஆணைக்குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலைக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளேன்' என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் தெரிவித்தார்.
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago