Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 12 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை 15 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு, வலியுறுத்த உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உடன்படிக்கையில் தோட்ட தொழிலாளர்களின் அத்தியாவசிய விடயங்களைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கு உரிய தீர்வு, ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைக்க, கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கசார் உப-குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'எதிர்வரும் 18ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடனும் கூட்டு ஒப்பந்தசார் தொழிற்சங்கங்களுக்கிடையிலும் நடைபெறும் இரண்டாம்கட்ட பேச்சுவாத்தையின் போது,
• தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் 15மூ ஆல் அதிகரிக்கப்படவேண்டும்,
• மரண செலவுகள் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும்,
• தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு சொந்தமான மரங்களை தரித்து வெளியாருக்கு விற்க கூடாது,
• அவை தொழிலாளர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்,
• திருமணம் செய்து வந்தவர்களுக்கு அதே தோட்டத்தில் வேலை வழங்கப்பட வேண்டும்,
• தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தேயிலைத் தூள் போதுமானதாக இல்லை. அவை ஒரு கிலோவுக்கு மேல் வழங்கப்படவேண்டும்,
• கைவிடப்பட்ட நிலையில் உள்ள 33 ஆயிரம் தோட்டக்காணிகளை தோட்டங்களில் வதியும் படித்த இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழிலுக்காக வழங்க வேண்டும்,
• புதிய சம்பள உடன்படிக்கை பொருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விமோசனம் அளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்
• நாளாந்த வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதற்கு ஏதுவான சம்பள உயர்வு தேவை
•
என்பதை வலியுறுத்தவுள்ளோம். அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம், தேயிலை விற்பனையில் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படலாம். ஆனால், இத்தகைய நெருக்கடிகளால் தொழிலாளர்களின் முறையான சம்பளத்துக்கு முற்றுக்கட்டை ஏற்பட்டு விடக்கூடாது' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
07 Jul 2025
07 Jul 2025