2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

தெஹியோவிட்ட கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளான புனித மரியா தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கன்னந்தொட்ட சுலைமானியா முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் சகல வளங்களையும் கொண்டு அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் திங்கட்கிழமை (11) திறந்து வைத்தார்.

மேற்படி பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடங்களுக்கு தேவையான கணினி, இயந்திரங்கள் மற்றும் இணையத்தள வசதிகள் என்பவற்றை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் வை.ஜீ.பத்மசிறி, மாகாண சபையின் உப தலைவர் சட்டத்தரணி துஷ்மந்த மித்ரபால. மாகாண சபை உறுப்பினர்களான  பராக்கிரம அதாவுத, சுஜித் சஞ்ஜய பெரேரா, நிஹால் பாரூக், ருவான்வெல பிரதேச சபை தலைவர் சுதத் மஞ்சுல், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவாகள் உட்பட் பலர் கலந்துகொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .