Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 13 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதி, தலா 75 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் சீர்திருத்தமானது மலையக தமிழ் மக்களுக்கான பரிகாரமாக அமைய வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
இதுதொடர்பில், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'1948ஆம் ஆண்டு பிரஜா உரிமை பறிப்பும் அதனால் மலையக தமிழ் மக்களுக்கு நுவரெலியாவில் இருந்த நான்கு தேர்தல் தொகுதிகளும் பதுளையில் இரண்டு தேர்தல் தொகுதிகளும் கண்டியில் இரண்டு தேர்தல் தொகுதிகளுமாக மொத்தமாக எட்டு தேர்தல் தொகுதிகளும்; அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லாதொழிக்கப்பட்ட அநீதிக்கு அல்லது வரலாற்று தவறுக்கு பரிகாரம் கானும் ஒன்றாக, தற்போது 20ஆவது யாப்பு திருத்தத்தின் மூலம் கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள தேர்தல் சீர்திருத்தம் வழிவகுக்க வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தத்தில் புதிய எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அதன்மூலம் கட்டாயம் மலையக மக்களுக்கான தேர்தல் தொகுதிகள் உட்பட எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
உத்தேச எல்லை மீள்நிர்ணய குழுவில் கட்டாயம் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரும் இடம்பெற வேண்டும். இந்த எல்லை மீள் நிர்ணயத்துக்கு நாட்டின் சகல இனங்களினதும்; இன விகிதாசாரத்தையும் அவர்கள்; வாழும் பகுதியின் புவியியல் தொடர்ச்சி, இனக்கட்டமைப்பு போன்றவற்றை கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டும்.
உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தில் தொகுதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தும்போது தற்போது நடைமுறையிலிருக்கும் 160 தேர்தல் தொகுதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஒரேயொரு தேர்தல் தொகுதியான நுவரெலியா- மஸ்கெலியா தேர்தல் தொகுதி, தலா 75,000 வாக்காளர்களைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும்.
நுவரெலியா (1), அக்கரப்பத்தனை (2) தலவாக்கலை (3), மஸ்கெலியா (4) ஆகிய தேர்தல் தொகுதிகளை தொகுதிவாரியாக மீண்டும் உருவாக்க வேண்டும்.
இதன்மூலமே 1948ஆம் ஆண்டு மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் காணமுடியும். அத்தோடு கொத்மலை, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில்; சிங்களவர்கள், தமிழர்கள் செறிந்து வாழ்வதால் இரட்டை அங்கத்துவர் தேர்தல் தொகுதிகளாக இவை மாற்றப்பட வேண்டும்.
மேலும் பதுளையிலும் கண்டியிலும் தலா இரண்டு தேர்தல் தொகுதிகளையும் இரத்தினபுரியில் ஒரு தேர்தல் தொகுதியையும் கொழும்பு, மாவட்டத்தில் இரு தேர்தல் தொகுதிகளுமாக குறைந்தது 12க்கு மேற்பட்ட தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்படவேண்டும்.
விகிதாசார முறையின் கீழ், நுவரெலியா பதுளை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய பகுதிகளில் குறைந்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது தெரிவு செய்யப்படக்கூடிய வகையில் மாவட்ட விகிதாசாரமுறை அறிமுகப்படுத்த வேண்டும்.
புதிய தேர்தல் சீர்திருத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகக் கொள்ளப்பட்டால் மலையக மக்களின் இன விகிதாசாரப்படி 16 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அத்தொகை 255ஆக அதிகரிக்குமாயின்; 18பேரை தெரிவு செய்யவேண்டும். எனவே உத்தேச கலப்புமுறை தேர்தல் சீர்திருத்தம் மலையக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரமாக, அமைய வேண்டுமென்றே சகலரும் எதிர்பார்க்கின்றனர்' என அவர் தனது அறிக்கiயில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago