2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளில் பெறுபேறு மட்டம் அதிகரிக்கப்படவேண்டும்: இராதா

Kogilavani   / 2015 மே 13 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற வளங்களுக்கு ஏற்ப பாடசாலைகளில் நல்ல பெறுபேறுகள் இல்லையெனில் அப்பாடசாலைக்கு எதிர்காலத்தில் கல்வி அமைச்சின் மூலமாக எந்த அபிவிருத்திகளும் கிடைக்காதென இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் பாடசாலைகளை தரமுயர்த்தும் முதலாவது வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை(12) நுவரெலியா சௌமிய கலையரங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பாடசாலைகளுக்கு வளங்கப்படும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தரத்திலும் க.பொ.த. உயர்தரத்திலும் சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெறவேண்டும். நல்ல பெறுபேறுகள் இல்லாவிட்டால் அந்த பாடசாலைக்கு அபிவிருத்திகளை கல்வியமைச்சினூடாக முன்னெடுக்க முடியாது.

பாடசாலைக்கு வழங்கள் வழங்கபடுகின்ற அளவுக்கு பெறுபேறுகளும் கிடைக்க வேண்டும். அதற்காக ஆசிரியர்களும் அதிபர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்.

எதிர்காலத்தில் தனித்தனி பாடசாலைகளாக இல்லாமல் அனைத்து இன மக்களும் கற்கக்கூடிய வகையில் பாடசாலைகள் ஏற்படுத்தப்படவேண்டும். இதன்மூலம் இன ரீதியான ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரம் எல்லா பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும்.

பொருட்களை வழங்குவது போல இந்த பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று தாதிகளாக நாம் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அப்பிரிவுக்கு தெரிவாகும் மாணவர்களின் வீதம் குறைவாகவே உள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும். அதுவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .