2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மலையகத்தில் குளவிகள் அட்டகாசம்: இரு தினங்களில் 53பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 மே 15 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

மயைகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் குளவிகளின் அட்டகாசத்தால் கடந்த மூன்று தினங்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் இருவேறு இடங்களில் நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்ற குளவிக் கொட்டுச் சம்பவங்களில் 12பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்ரி தோட்ட பகுதியில் நேற்று பிற்பகல் குளவி கொட்டியதால் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கபட்டவர்களில்  5 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டிக்கோயாவில் நேற்று  குளவி கொட்டுக்கு இலக்கான இரண்டு மாணவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா, தோட்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாடசாலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்தபோதே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஹட்டன், டிக்கோயா, கிளங்கன் உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக குளவி கொட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதுடன் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .