2025 ஜூலை 07, திங்கட்கிழமை

எதிர்கட்சிகள் வியப்படையும் அளவுக்கு சட்டமும் நீதியும் முன்னெடுக்கப்படுகின்றன

Kogilavani   / 2015 மே 15 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

புதிய ஆட்சியில் ஜனாதிபதி பிரதமருடைய முயற்சியின் காரணமாக எதிர்கட்சிகள் வியப்படையும் அளவுக்கு சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட்டு வருவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எமது நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை என்பன பல பின்னடைவுகளை கண்டிருந்ததால் சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு உதவிகள் கிடைக்காமல் போனதை நாம் அறிவோம்.

இதன் காரணமாக நமது நாட்டுக்கு எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகள் வந்தடைய வாய்ப்புள்ளதாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிததார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய மலையக பாடசாலைகளை தரமுயர்த்தும் மூன்றாவது வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை(15) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞான பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க, மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன்பெருமாள், கல்விப் பணிப்பாளர்கள் கல்வி அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பாடசாலைகளுக்கு ஆரம்ப கட்டமாக விஞ்ஞான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலைக்கவி உபகரணங்கள், வாசிகசாலைக்கு தேவையான புத்தகங்கள், தொழில்நுட்ப ஆய்வுகூட வாசிகசாலைக்கு தேவையான விஞ்ஞான புத்தகங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்குவானை பரியோவான் தமிழ்மகா வித்தியாலயம், காவத்தை ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயம், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மகா வித்தியாலயம், கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட புனித மரியாள் தமிழ் மகாவித்தியாலயம், ஸ்ரீ கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவறறுக்கு மேற்குறிப்பிட்ட பொருட்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
'இன்று இலங்கையின் க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் படி இரத்தினபுரி மாவட்டம் குறிப்பிட்ட ஒரு இலக்கை அடைந்துள்ளது. அதேபோல சாதாரண தரத்திலும் குறிப்பிடும் அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது. இதனை நாம் எதிர்பார்க்கினறோம். வளங்கள் வழங்கப்பட்டாலும் இறுதியில் ஒரு பாடசாலையை மதிப்பிடுவது அதன் கல்வி பெறுபேறுகளை கருத்தில் கொண்டே ஆகும்.

இதுவரையில் இலங்கையில் இருந்த பிரதமர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் மறைந்த ரணசிங்க பிரேமதாசவும் தற்போது பிரதமராக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை குறிப்பிடலாம். இந்த இருவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஏனையவர்களுக்கு அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பதவிகளை வழங்கினால் மாத்திரம் போதாது. அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

எனவே எதிர்காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும். பிரதமர், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றார். அதிலும் மலையக கல்விக்கும் வடக்கு கிழக்கு கல்வித்துறை தொடர்பாகவும் அதி கவனம் செலுத்தி வருகின்றார்' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .