Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து கௌரவித்த வரலாற்றை பலர் மறந்து விட்டனர். சிறுபான்மையினரை பாதுகாப்பதே கட்சியின் கொள்கை என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
கண்டியில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
'கண்டியை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து வந்தனர். இவர்கள்,ஒல்லாந்தர் காலத்தில் இனசுத்திகரிப்பு செய்யப்படவிருந்தனர். அப்போது ஸ்ரீ ராஜ சிங்கமன்னர் முஸ்லிம்களை கிழக்கிலும் அக்குரணையிலும் குடியேற்றினார்' என்றார்.
'இன்று சில கடும்போக்கு அமைப்புகளுக்கு வரலாறு மறந்துவிட்டது. சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கு நினைக்கிறார்கள்.அவர்கள் எமது வரலாற்றை படித்து விட்டுவரவேண்டும்'எனவும் அவர் தெரிவித்தார்.
'மலரவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பலம்மிக்க அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாகப்படுமென்றும்'அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago