Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 21 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரது புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளில் மறைக்கப்பட்டிருந்த றப்பர் சீட்டுகள் இன்று வியாழக்கிழமை (21) அகற்றப்பட்டன.
கொட்டகலை மற்றும் ஹட்டன் மல்லியப்பூ பகுதிகளில், காணப்பட்ட பதாதைகளில் காணப்பட்ட றப்பர் சீட்டுகளே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது, அவரின் உருவபடங்கள் மாத்திரம் குறித்த பதாதைகளில் றப்பர் சீட்களால் மறைக்கப்பட்டிருந்தது.
எனினும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைகளில் மூடி மறைக்கப்பட்டிருந்த றப்பர் சீட்கள் அனைத்தையும் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கும் மாஜன எக்சத் பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான எலப்பிரிய நந்தராஜ் அப்புறப்படுத்தியுள்ளார்.
இதன்போது எலப்பிரிய நந்தராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...
படைவீரர்கள் ஞாபகார்த்தப்படுத்தும் இந்த கிழமையில் இலங்கை நாட்டில் இருந்த யுத்தத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்தி இன, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களுடனும் ஒற்றுமையை ஏற்படுத்தி, இந்த நாட்டுக்கு பல அபிவிருத்திகள் செய்து கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ படத்தை மூடி மறைப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என்று இதன்போது எலப்பிரிய நந்தராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல வரப்பிரசாதங்களை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பெற்றுக்கொண்டிருந்தாலும் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த உருவ படத்தை திறந்து வைப்பதற்கு எவருக்கும் முதுகெழும்பில்லையென்றும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி இந்த நாட்டை பாதுகாப்பதற்கு மீண்டும் அரசியலுக்கு வரப்போவதை நல்லாட்சி நடத்தும் ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பயமுற்று இருப்பதாகவும் இந்த நாட்டின் பல வாக்காளர்கள் இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும் வெகுவிரைவில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago