Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 23 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கௌரவத்தையும் நாடாளுமன்றத்தின் புனித தன்மையையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வெள்ளிக்கிழமை (22) தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நானயக்கார நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங் கையின் அரசியல் வரலாற்றில் மூத்த தொழிற்சங்கவாதியும் மூத்த அரசியல்வாதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இவ்வாறு தகாத வார்த்தைகளால் பிரதமரை விமர்சித்தமையானது அவர் மீது இந்த நாட்டு மக்கள் வைத்திருந்த கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஒரு பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதையும் உணர்த்துகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற வேளையில், நாடாளுமன்ற பார்வையாளர் பகுதியில் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் அவரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. பாடசாலை மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும் சட்டங்களை உருவாக்குகின்ற ஒரு புனிதமான இடமாகவும் நாடாளுமன்றம் விளங்கவேண்டும். ஆனால், இங்கு நடைபெற்ற சம்பவம் பிள்ளைகளை நாம் தவறான வழியில் இட்டுச்செல்வது போன்றும் நாடாளுமன்றம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைப்பது போலாகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இதன் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடைய கௌரவமும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, கட்சித்தலைவர்களுடையதாகும்.
இதன்போது எதிர்கட்சிகள் கைதட்டி உற்சாகம் ஊட்டியமை, ஒரு எதிர்கட்சி எவ்வாறு நடந்து கொள்ள கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
58 minute ago
3 hours ago
5 hours ago