Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 23 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வைத்தியசாலை கட்டடத்தை திறக்கக்கோரி நேற்று வெள்ளிக்கிழமை (22) பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கட்டடம் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டதாகவும் நிர்மாணப்பணிகள் முழமையடைந்துள்ள நிலையிலும் கட்டம் இதுவரை திறக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தற்போது இயங்கி வரும் வைத்தியசாலையில் இடப்பற்றாகுறை காணப்படுவதால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
இப்புதிய கட்டடத்தை பொது மக்களின் நலன்கருதி, உடனடியாக திறக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஹட்டன், நோர்வூட் மற்றும் நோட்டன் பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகெண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago