2025 ஜூலை 05, சனிக்கிழமை

கட்டட திறப்பு விழா

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை கல்விவலயத்திற்குட்பட்ட கம்பஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடம் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டடம் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பிரதேச காமன் கூத்து கலைஞர்கள் அமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா நிகழ்வில் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ், ஊவா மாகாண சபை உறுப்பினர் உபாலி சமரவீர உட்பட பலர் கலந்துகொண்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .