2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோயில் காணி சுவீகரிக்கப்பட்டதாக ரொசல்லயில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 மே 24 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

வட்டவளை, ரொசல்ல, ஹெய்ட்றி தனியார் தோட்டத்திலுள்ள ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை தோட்ட நிர்வாகம் சுவீகரித்துள்ளதாகவும் அக்காணியை ஆலயத்துக்கு வழங்குமாறும் வலியுறுத்தி, அத்தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

1974ஆம் ஆண்டில் ஹெய்ட்றி முத்துமாரியம்மன் ஆலயத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட காலமாக ஆலயத்துக்குச் செந்தமாக இருந்த இடத்தை தோட்ட நிர்வாகம் தற்பொழுது உரிமை கொண்டாடுவதாகவும் சுவீகரித்த காணியை மீள வழங்குமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்தியில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவில் ஆலய பரிபாலன சபையினர்கள், தோட்ட பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்பாட்ட இடத்துக்கு வருகை தந்த மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.சிறிதரன், காணி மறுசீரமைப்பு ஆனைக்குழ மற்றும் தோட்ட நிர்வாகத்துடனும் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .