2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆசிரிய உதவியாளர்களை திசைமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். கோகுலன்

தமிழ் மொழி மூல பெருந்தோட்ட பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட ஆசிரிய உதவியாளர்களை திசைமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் இன்று பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது 599 ஆசிரியர் உதவியாளர்களுக்கு 7 பாடசாலைகளை மையமாக கொண்டு 30 ஆம் திகதியிலிருந்து 10 நாட்களுக்கு பயிற்pசிகள் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட புங்கிடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
    
இந்நிகழ்வில், முன்னாள் ஊவா மாகாண உறுப்பினர் அரவிந்தகுமார் மற்றும் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.பீ.  ரத்னாயக உட்பட பலர் கலந்துக்கொன்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .