2025 ஜூலை 05, சனிக்கிழமை

முஸ்லிம் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் தனவந்தர்கள் பங்களிப்பு செலுத்தியுள்ளனர்

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

முஸ்லிம் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் முஸ்லிம் தனவந்தர்கள் பாரிய பங்களிப்பு செய்து வந்துள்ளனர் என்று முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் குறிப்பிட்டார்.

கெலிஓயா நியு எல்பிடிய அஸ்-சம்ஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா சனிக்கிழமை (23) நடைபெற்றது. வித்தியாலயத்தின் அதிபர்  பௌசுல் அமீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

முஸ்லிம் பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் முஸ்லிம் சமூகத்திலுள்ள தனவந்தர்கள் பெரும் பங்காற்றி  வருவதை நாடளாவிய ரீதியில் காண முடியும்.

மத்திய மாகாண சபையில் நான் அமைச்சுப் பதவி வகித்த காலத்தில் மாகாண முஸ்லிம் பாசாலைகளின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது.

முஸ்லிம்கள் கடந்த ஆட்சியில் நசுக்கப்பட்டனர். ஆனால், ஜனாதிபதி மைத்தி;ரி பாலவின் ஆட்சியில் நிம்மதியுடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிகழ்வில், பாசடாலை ஸ்தாபகரும் முன்னாள் அதிபருமான அல்-ஹாஜ் ஏம்.சீ.எம். ஜவ்பர், தொழிலதிபர் அல்-ஹாஜ். எச்.எம். நிலார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சின்னம் வழங்கி அமைச்சரால் கௌரவிக்கப்பட்டனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .