2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெடிபொருட்களுடன் அறுவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி -மாhத்தளை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்களை  அலவத்துகொடை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வானை அலவத்துகொடை பிரதேசத்தில்  சோதனையிட்டதாகவும் இதன்போது அந்த வானிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

டயனமைட், வெடிக்க வைப்பதற்காக பயன்படுத்தும் நூல்,  இனந்தெரியாத ஒரு வகையான மூன்று லீற்றர்  இரசாயனத்திரவம் உள்ளிட்டவை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த வானில் பயணித்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஐந்து பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வானின் சாரதியை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்த இரசாயனத்திரவத்தை இனம் காண்பதற்காக  அரச பகுப்பாய்வுக்கு  அனுப்பவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிபொருட்கள் புதையல் தோண்டும் நோக்குடன் கற்பாறைகளை வெடிக்கவைப்பதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்று  பொலிஸார் நம்புகின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .