2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் சேவைகள் ஸ்தம்பிதம்

Kogilavani   / 2015 மே 27 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக பயனாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நகர சபையின் செயலாளர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பலர், திருமண வீடொன்றுக்காக சென்றிருப்பதால் பொதுச் சேவைகளை பெறும் நோக்கில் நகர சபைக்குச் சென்ற மக்கள் பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கினிகத்தேனை – களுகல என்ற பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற திருமண வைபவத்துக்காக ஹட்டன்- டிக்கோயா  நகரை சபையின் செயலாளர் உள்ளிட்ட 25 பேர் காலை 10.30 அளவில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொதுச் சேவைகளைப் பெறுவதற்காக நகர சபைக்குச் சென்ற மக்கள், அங்கு உத்தியோகத்தர்கள் இன்மையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண சபை ஆணையாளர் பீ.எச்.என்.ஜயவிக்கிரமவிடம் கேட்டபோது,
குறித்த நகர சபையிலுள்ள உத்தியோகத்தர்களில் மூவரைத் தவிர ஏனையோர் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அரைநாள் விடுமுறையில் சென்றள்ளதை உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பில் அவர்கள் நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளரிடம் அறிவித்துள்ளதாகவும் புதன்கிழமை பொதுமக்களின் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தினம் என்பதால், அவர்கள் இவ்வாறு விடுமுறை எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல் என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .