2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றம் உறங்கும் இடமல்ல: இராதா

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது,  அவர்களின் பிரச்சினைகளை பேசி அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காகவே. ஆனால், இன்று என்ன நடக்கின்றது. நாடாளுமன்றத்தில் கூச்சலிடவும், குழப்பம் விளைவிக்கவும் மட்டுமே எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள். இது ஒரு பிழையான நடைமுறையாகும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனம் இரண்டாம் கட்டம் வியாழக்கிழமை (04), கொழும்பு கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 370 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று நாட்டின் எதிர்க்கட்சியினர், இந்த நாடாளுமன்றத்தையும் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தையும் குழப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரமே செயல்படுகின்றார்கள். இது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும். நாட்டை குழப்புவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கே வாக்களித்துள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஆனால் இன்று அவர்கள் அப்படி செயற்படுவதில்லை. நாடாளுமன்றத்தில்  பிழையான வார்த்தை பிரயோகம், கூச்சலும் குழப்பமுமாக இருக்கின்றார்கள். அங்கு உறங்குகின்றார்கள். நாடாளுமன்றம்  உறங்குவதற்கான இடம் அல்ல. எனவே, எதிர்வரும் தேர்தலில் சரியானவர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டிய பொறுப்பு மக்களிடம் இருக்கின்றது.

ஒருவருக்கு வாக்களிக்கின்ற பொழுது, அவர் தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்த்து வாக்களிக்க வேண்டும். பணத்துக்காவும் அல்லது வேறு தேவைகளுக்காகவும் வாக்களிக்க கூடாது. அப்படி வாக்களித்தால் பின்பு நீங்கள் மனவருத்தப்படுவதில் அர்த்தமில்லை.

இன்று வழங்கப்படும் இந்த நியமனம், பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே வழங்கப்படுகின்றது. எனவே இதனுடைய முழுமையான பலனை நீங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். மிகுதி வழங்கப்படவுள்ள 963 பேருக்கு மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X