2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பயோ டீயை உற்பத்தி செய்யவேண்டாம் என ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், நோர்வூட் தோட்டத்தில் நாளை முதல் ஆரம்பிக்கவிருக்கும் பயோ டீ தேயிலை உற்பத்தியை, செய்ய வேண்டாம் என கோரி இன்று வியாழக்கிழமை (04) தொழிற்சாலைக்கு முன்னால் தோட்ட மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ரொக்வூட் தோட்டத்தில் 67 ஏக்கர் தேயிலை மலைக்கு ஒரு வருட காலமாக நிர்வாகத்தினால் உரம், மருந்துகள் போன்றவைகள் போடாதமையால், தேயிலை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தேயிலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனாலும் தங்களது பொருளாதார ரீதியில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் மீண்டும் தோட்ட நிர்வாகத்தினர் இந்த தேயிலை மலையை உரிய முறையில் பராமரித்து தேயிலை உற்பத்தி செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டம் கடாக இருப்பதனால், அங்கு வேலை செய்யும் எங்களுக்கு விச பாம்புகள் உட்பட மிருகங்களின் தொல்லையும் காணப்படுவதாக தோட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நோர்வூட் மாவட்ட தோட்ட நிறைவேற்றதிகாரி, உதேனி நவரட்ணவிடம் இது தொடர்பாக வினவிய போது,

இலங்கையின் மலையக தேயிலையை ஜப்பான் உட்பட பல நாடுகள் தேநீர் அருந்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.

இரசாயன பொருட்களில் உற்பத்தி செய்யும் தேயிலை, உடல் ரீதியாக பாதிக்கும் என்பதால் பயோ டீயையே கேட்கின்றனர்.

இதனால், பயோ டீயை உற்பத்தி செய்வதற்கு 45 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தொழிற்சாலை ஒன்று செய்து இருக்கின்றோம்.

67 ஏக்கர் தேயிலை மலைக்கு கூட்டு பசளையை மட்டும் போட்டு வளரும் கொழுந்தில் தயாரிக்கும் தேயிலையில் பயோ டீ செய்வதனால் 1 கிலோ தேயிலை தூளை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அதனால் குறித்த தோட்ட தொழிலாளிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X