2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தனியார் பஸ் வண்டிகள் திடீர் சோதனை

Kogilavani   / 2015 ஜூன் 05 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பஸ் வண்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(5) திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா, கினிகத்தேனை பகுதிகளில் சேவையில் ஈடுபடும் வாகனங்களே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பயணிகளின் முறைபாடுகளுக்கமைய தனியார் பஸ் வண்டிகள், சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் இவ்வாறு திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அனோமா பொல்வத்தவின்  ஆலோசனைக்கமைய பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்ட சோதனையின்போது சாரதி மற்றும் நடத்துனருக்கான அனுமதிபத்திரம், சீருடை, பயணிகளுக்கான பயண சீட்டு, வாகனங்களின் தரம் என்பவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன.

மேலும் கண்டி, மாத்தளை, தம்புளை பகுதிகளிலும் இவ்வாறான திடீர் சோதனைகள் இடம்பெற்றதாகவும் எதிர்கலத்தில் சிறந்த தனியார் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் வகையில் மேலும் பல விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மேலதிக அதிகாரி அனுரத்த கல்பொத்த தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X