Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 05 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'புதிய கூட்டணியின் மீது ஏற்பட்ட பயத்தால் அதனை பலர் விமர்சிக்கின்றனர்' என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
'கடந்த கால அரசாங்கம் மலையகத்தையும் வடக்கு, கிழக்கையும் மாற்றாந் தாய் மனப்பான்மையுடனே பார்த்தது. அபிவிருத்தி என்ற போர்வையில் சில கண்மூடி வித்தைகளை செய்தது. வள பகிர்வில் எமக்கு வேறான அகப்பைகளை பயன்படுத்தியது. ஆனால் இன்றைய அரசாங்கம் வளப்பகிர்வில் சகல பகுதிக்கும் ஒரே அகப்பையில் பங்கீடு செய்வதானது அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பதாகவே நான் உணர்கின்றேன்' என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'நாட்டை ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். அதில் பாராபட்சம் காட்டக்கூடாது. தேர்தலில் நாம் பல கட்சிகளாக பிரிந்து நின்று செயல்பட்டாலும் தேர்தலின் பின்பு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்படி செயற்பட்டால் பல வெற்றிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கு சிறந்த உதாரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இதனை நாம் உணர்ந்ததன் காரணமாகவே மலையக கட்சிகளை ஒன்றினைத்து தற்போது நாங்களும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக மலையக மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் எமது சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டும். அப்படி செய்தால் நம் பல உரிமைகளையும் வென்றெடுக்க முடியும். இன்று பலரும் இந்த கூட்டணியை விமர்சிக்கின்;றார்கள் அதற்கு காரணம் அவர்களிடம் ஒரு பயம் ஏற்பட்டுள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago