2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெற்றோருடன் இணைந்து வாழ மறுக்கும் சிறுமி

Kogilavani   / 2015 ஜூன் 05 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தனது பெற்றோருடன் இணைந்து வாழ மறுக்கும் 16 வயது சிறுமியை  நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்படி சிறுமி (வயது 14) இளைஞனொருவருடன் சென்று சுமார் ஒரு வருடம் அவருடன் வாழ்ந்துள்ளார். பின்னர் பொலிஸார் சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் திகதி, பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அச்சிறுமி தனது வீட்டிலிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை(5) மீண்டும் சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க முற்பட்ட போதும் சிறுமி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டதுடன் பெற்றோரும் அவரை அழைத்துசெல்ல மறுத்துவிட்டனர்.

இதனால் சிறுமியை கண்டி நீதவான் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X