Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை போகாவத்தை பகுதியில் வைத்து பாவனைக்குதவாத 14,900 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளை கைப்பற்றியதோடு, நான்கு சந்தேக நபர்களையும் திம்புள்ள பத்தனை பொலிஸார் நேற்று (05) இரவு கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கம்பளை பகுதியூடாக இரண்டு லொறிகளில் சட்டவிரோதமான முறையில் பாவனைக்குதவாத கழிவு தேயிலை தூளை ஏற்றிச்சென்ற போதே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இரண்டு லொறிகளில் இருந்த கழிவு தேயிலை தூளை கைப்பற்றியதோடு, நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago