2026 மே 14, வியாழக்கிழமை

dd

உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மத்திய மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கான, நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராம் தலைமையில் ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில்  சனிக்கிழமை (06) இடம்பெற்றது.

இதன்போது 619 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. தலைவர் முத்துசிவலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .