Kogilavani / 2015 ஜூன் 07 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
'தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெற்றுகொடுக்கப்பட வேண்டும். இச்சம்பள உயர்வு பெற்றுகொடுக்கப்படாத பட்சத்தில் மலையக பெருந்தோட்டங்கள் அனைத்தும் முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் வகையில் தொழிலாளர்கள் அனைவரும் வீதியிலிறங்கி போராடுவர். தொழிலாளர்கள் நன்மைக்கருதி இடம்பெறும் இப்போராட்டத்துக்கு நானே தலைமை வகிப்பேன்' என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'வாழ்க்கைச் செலவு உயர்;;வு காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கிடைக்கும் சம்பளத்தில் வாழ முடியாத நிலையில் உள்ளனர். இதனால், இவர்களது நாள் சம்பளம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வரவு-செலவு திட்டத்தின்போது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
ஆனால் அந்நிய செலாவணியை பெருமளவில் ஈட்டித்தரும் தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்சம்பளமே வழங்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்கள் மேற்படி விடயம் குறித்து கவனம் செலுத்த தவரின் தோட்ட தொழிலாளர்களின் சாபத்துக்கு மேற்படி தொழிற்சங்கங்கள் ஆளாக வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும்' என்றார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago