Sudharshini / 2015 ஜூன் 10 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
லுணுகலை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டிருந்த இரு பாடசாலை மாணவர்களை லுணுகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
லுணுகலை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் இரு மாணவர்கள், பாடவேளையில் போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய குறித்த மாணவர்கள் இருவரையும் லுணுகலை பொலிஸார் இன்று (10) கைது செய்துள்ளனர்.
மேலும், மாணவர்களிடமிருந்து போதைப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
லுணுகலையிலுள்ள கடையொன்றிலிருந்தே தாம் பணம் கொடுத்து போதைப்பொருட்களை பெற்றுக்கொண்டதாக மாணவர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த கடையை பொலிஸார் மூடியதுடன் கடையின் உரிமையாளரையும் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago