2026 மே 14, வியாழக்கிழமை

இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழும் குழியிலிருந்து இரண்டு கைக்குண்டுகளை நேற்று சனிக்கிழமை (13) மீட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்ட பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்,  இந்த கைக்குண்டுகளை கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார், கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இக் கைக்குண்டுகள் எவ்வாறு இப்பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .