Sudharshini / 2015 ஜூன் 14 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கல்வி வலயத்துக்குள் அதிகளவிலான தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுவதால், இவ்வலயத்துக்கு என தமிழ்க் கல்விப்பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதுக்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியா கல்வி வலயத்தில் தமிழ் மொழி பாடசாலைகள் அதிகளவில் காணப்படுகின்ற. ஆனால், இவ்வலயத்தில் கல்விப்பணிப்பாளராகவும் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் தமிழர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
அத்துடன், தேவைக்கேற்ற வகையில் பாட இணைப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் நிமிக்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிலையில் நுவரெலியா கல்விவலயத்திலுள்ள பல தமிழ் பாடசாலைகள் உரிய கட்டட வசதிகளின்றி இயங்குகின்றன.
குறிப்பாக அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலுள்ள பல பாடசாலைகள் பழமை வாய்ந்த கட்டடங்களிலேயே தொடர்ந்து இயங்குகின்றன. ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு சீடா நிறுவனத்தின் மூலம் கட்டட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, மத்திய மாகாண கல்வியமைச்சு நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள தோட்டப்பகுதி பாடசாலைகளுக்குப் புதிய கட்டட வசதிகளை வழங்குவதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .