Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி துண்டுபிரசுர விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரியில் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கமான இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இத்துண்டுபிரசுரங்களை விநியோகித்தது.
இரத்தினபுரி, காவத்தை, இறக்குவானை போன்ற நகரங்களில உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நகருக்கு வருகை தந்த பொது மக்களிடம் மேற்படி சங்கத்தின் கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்கள் இதன்போது விநியோகிக்கப்பட்டன.
இதில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கமான இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ராஜித மற்றும் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago