Kogilavani / 2015 ஜூன் 17 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களை அதிபர் மட்டும் ஆசிரியர்கள் மட்டந்தட்டுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களை அப்பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் மட்டந்தட்டி வருவதாக புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர் உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் அநேகமான பாடசாலைகளில் இவ்வாறான சம்பவங்கள்; இடம்பெற்று வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்பாலான தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக 5க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாங்கள் கடமையாற்றும் பாடசாலைகளில் எந்தவிதமான பொறுப்புக்களும் வேலைகளும் வழங்கப்படவில்லை என்றும் வெறுமனே காலத்தை போக்க வேண்டியுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர் உதவியாளர்கள் கோரி நிற்கின்றனர்;.
சப்ரகமுவ மாகாணத்தில் 394 பேருக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
13 May 2026
13 May 2026