2026 மே 14, வியாழக்கிழமை

dd

வீதியில் இறங்கி போராடுவோம்: சாலோபராஜா

Kogilavani   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

'நமுனுகலை கம்பனி நிர்வாகத்துக்கு உட்பட்ட பசறை, கோணகலை, கனவரெல்ல, இந்தகலை, பிங்காராவை மற்றும் கிளணன் ஆகிய தோட்ட தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்காவிடின் வீதியில் இறங்கி போராட நேரிடும்' என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் இரா.சாலோபராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி கம்பனிக்குட்பட்ட தோட்டங்களை கடந்த 2006 ஆம் ஆண்டு, டஸ்கர் பொட்லின் கம்பனி உப குத்தகைக்கு பெற்றுகொண்டது. இக்கம்பனி கடந்த 2006-2013 ஆம் ஆண்டுவரை மேற்படி தோட்டங்களை நிர்வகித்து வந்ததுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு மீண்டும் நமுனுகல கம்பனி நிர்வாகத்து இத்தோட்டங்களை கையளித்தது.

உபகுத்தகைக்கு பொறுப்பேற்றதன் பின்னர் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பணவுகளை கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் கொடுக்க தவறியுள்ளதால் தொழிலாளர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

2008-2009 வரையான காலப்பகுதிளில் மேற்படி கம்பனி நிர்வாகத்துக்குட்பட்ட தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி 626188.29 ரூபாய், ஊழியர் நம்பிக்கை நிதி 102420.39 ரூபாய், வங்கி கடன் 1123602.68 ரூபாய், நலன்பரி தொகை 39532 ரூபாய், சேவைக்கால பணம் 1365604 ரூபாய், வீட்டுக்கடன் 25,6806.20 ரூபாய் ஆகிய  கொடுப்பனவுகள் இன்று வரை நிலவையிலுள்ளது.

இத்தொகையை கடந்த ஏழு வருடங்களாக தோட்ட கம்பனி பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிலுவையிலுள்ள தொகையை பெற்றுக்கொடுக்கும் முகமாக இன்று (17) பதுளை தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தொழிலாளர்களின் ஒப்புதலை பெற்று தம்மிடம் சமரப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தொழிலாளர்களிடம் பெறப்படும் ஒப்புதலை பரிசீலனை செய்து அதன்மூலம் பெறப்படும் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

மேலும் தோட்ட கம்பனிக்கும் எமது கோரிக்கையை வழியுறுத்துவோம். எமது கோரிக்கைக்கு செவி சாய்க்காவிடின் வீதியிலிறங்கி சத்யாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவும் தயங்கமாட்டோம்'என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .