Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் இரத்தினபுரி பதுல்பான பிரதேசத்தில் வைத்து லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து வியாழக்கிழமை (18) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, லொறியின் உதவியாளர் சிறு காணங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலையில் இருந்து மரங்களை ஏற்றி வந்த லொறியே இவ்வாறு இரத்தினபுரி பதுல்பான பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது
இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago