Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமச்சந்திரன்
பாடசாலை அதிபர்களையும் ஆசிரியர்களையும் தவறான முறையில் பேசிய மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கடந்த 11ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அதிபரையும் ஆசிரியர்களையும் கல்வி அதிகாரிகளையும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவர், பகிரங்கமாக தவறான முறையில் சாடியுள்ளார்.
அவ்வாறு ஒரு மேடையில் ஒரு மத்திய மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் இதற்கு ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர்களாகிய தாங்;கள் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏனையோரும் புரிந்துணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, அன்றையதினம் குறித்த நிகழ்வின்போது மேற்படி மத்திய மாகாணசபை உறுப்பினர் மேடையில் ஏறி பேசிக்கொண்டிருக்கும்போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அவரது பேச்சை செவிமடுக்காது புறக்கணித்து வெளிநடப்பு செய்திருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago