2026 மே 14, வியாழக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோதமாக  மாணிக்கக்கல் அகழ்வில் ஈடு;பட்ட  குற்றச்சாட்டின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   

அத்துடன், இவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட  பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை, பொகவந்தலாவ பகுதிகளைச்  சேர்ந்த  இந்தச் சந்தேக நபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் சமரவிக்கிரம தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .