Sudharshini / 2015 ஜூன் 22 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சி.எம்.ரிபாத்
கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் வைத்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வந்த வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தை பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்துள்ளனர்.
மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர், கண்டி குற்றப்புலனாய்வு பொலிஸாரின்; உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது இரண்டு இலட்சத்து 21ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.
கடையின் உரிமையாளர் உட்பட மேலும் இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேநகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago